பதிவு செய்த நாள்
28
நவ
2012
11:11
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. ஓசூர் பகுதியில் நேற்று கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் வீடுகள் முன் கோலங்கள் போட்டு, அகல்விளக்குகள் ஏற்றினர். கொளுக்கட்டை, பொறி ஆகியவற்றை ஸ்வாமிக்கு படைத்து குடும்பத்துடன் வழிப்பட்டனர். ஓசூர் கிருஷ்ணகிரி சாலையில் மலை மீது உள்ள சந்திரசூடேஸ்வரர் கோவிலில், நேற்று காலை முதல் மாலை வரை பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. மாலையில் சந்திரசூடேஸ்வரர் மலை மீது தீபம் ஏற்றப்பட்டு சொக்க பானை கொளுத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். மாலை சிறப்பு கார்த்திகை தீப விழா பூஜைகள் நடந்தது. பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்வாமியை வழிப்பட்டு சென்றனர். ஓசூர் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் தலைவர் மாதேஸ்வரன், துணைத்தலைவர் ராமு, ஒன்றிய அ.தி.மு.க., பொருளாளர் சிட்டி ஜெகதீஷ், பாரதீய ஜனதா மாவட்ட செயலாளர் நாகராஜ், தி.மு.க., கவுன்சிலர் சீனிவாசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.கார்த்திகை தீப திருவிழாவையொட்டி ராம்நகர், காந்சிலை, பஜார் வீதிகளில் அகல் விளக்குள் விற்பனை அமோகமாக நடந்தது. பொதுமக்கள், ஆர்வமாக அகல்விளக்குளை வாங்கி வீடுகளில் ஏற்றினர்.