பதிவு செய்த நாள்
02
டிச
2024
04:12
திருவண்ணாமலை ; அண்ணாமலையார் மலை மேல் அமைந்துள்ள குகை நமச்சிவாயர் கோவில் தடுப்புச்சுவர் கனமழையில் இடிந்து விழுந்தது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த, ‘பெஞ்சஸ்’ புயல், புதுச்சேரி அருகே நேற்று கரையை கடந்தது. இதனால் புதுச்சேரி, தமிழகத்தின் விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்துார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த நவ., 30 மதியம் முதல் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று முதல் மழையளவு அதிகரித்து, பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலை, 7:00 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஊத்தங்கரையில், 50.3 செ.மீ., அளவில் மழை பதிவானது. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மேலே அமைந்துள்ள குகை நமச்சிவாய கோவில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அருகே இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்