திருப்பூரில் வேல் வழிபாடு: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2024 11:12
திருப்பூர்; திருப்பூர், முதலிபாளையம், சிட்கோ அருகில் நடந்த மங்கல வேல் வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், வேல் வழிபாடு நிகழ்ச்சி கடந்த மாதம் துவங்கியது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர், முதலிபாளையம் சிட்கோ பகுதிக்கு நேற்று மாலை மங்கல வேல் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொது செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏராளமான பெண்கள் பங்கேற்று, வேல் வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும், அன்னையர் முன்னணி பெண்கள் அலகுமலைக்கு பால்குடம் ஊர்வலம் செல்வதாக இருந்த நிலையில், இதற்கு போலீசார் அனுமதி மறுத்து, வாகனங்களில் செல்ல அறிவுறுத்தினர்.