பதிவு செய்த நாள்
03
டிச
2024
11:12
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, கரியகாளியம்மன் கோவில் வளாகத்தில் பொன்மலை வேலாயுத சுவாமி கலைக்குழுவின், வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், முதலாவதாக சிவலோகநாதர் உடனமர் சிவலோக நாயகி கோவிலில் சுவாமி தரிசனம் செய்யப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுநடப்பட்டது. அதன்பின் பக்தர்கள் அனைவரும் முளைப்பாரி எடுத்து சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கரியகாளியம்மன் வழிபாடு, கோமாதா வழிபாடு, கொடியேற்ற நிகழ்வு மற்றும் வள்ளிக்கும்மி அரங்கேற்றம் நடந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, வள்ளிக்கும்மி நடனம் ஆடினர். இதேபோன்று, காட்டம்பட்டியில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில், சலங்கை ஒலி கிராமிய கலைக்குழு மற்றும் காட்டம்பட்டி பழனியாண்டவர் கலைக்குழுவின் சார்பில், 31வது வள்ளிக்கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று, வள்ளிக்கும்மி நடனம் ஆடினர்.