சிறப்புலி நாயனார் குருபூஜை விழா; இறைவனுக்கு அன்னம்பாலிப்பு நிகழ்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2024 10:12
மயிலாடுதுறை; சிறப்புலி நாயனார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிக்கும் போது இறைவன் ஆயிரத்தில் ஒருவராக தோன்றிய புரான நிகழ்வுபடி அன்னம்பாலிப்புவிழா, சிறப்புலி நாயனார்குருபூஜை விழா நடைபெற்றது;- தருமபுரம் ஆதீனம் பங்கேற்று விழாவை தொடங்கி வைத்து தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீவாள் நெடுங்கண்ணி சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 3 தலவிருட்ச மரம் உள்ள இந்த இடத்தில் கோச்செங்கட் சோழனால் கோயில் கட்டப்பட்டபோது ஒருநாள், கட்டிய சுவர் மறுநாளே இடிந்து விழுந்து வந்ததால் ஆயிரம் அந்தணர்களுக்கு 48 நாட்களுக்கு அன்னதானம்’ செய்தால் குறைபாடு நீங்கும் என்று இறைவன் சொல்ல அதன்படி 64 நாயன்மார்களில் ஒருவரான சிவ பக்தர் சிறப்புலி நாயனார் தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். 999 பேர் சாப்பிட்டனர். இதனால் இறைவனிடம் வேண்ட 48வது நாளில் ஆயிரத்தில் ஒருவராக இறைவன் உணவருந்தி நாயனாருக்கு காட்சியளித்த புராண நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் ஆயிரத்தொருவருக்கு அன்னம்பாலிப்பு திருவிழாவும், சிறப்புலி நாயனார் குருபூஜை விழாவும் புராண நிகழ்வுபடி இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு வாள் நெடுங்கண்ணி அம்மன் மற்றும் தான்தோன்றீஸ்வரருக்கு பால் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆயிரத்தில் ஒருவராக தொன்றிய இறைவன் சிறப்புலி நாயனார் உடன் கோயில் பிரகாரம் சுற்றி வந்து எழுந்தருள செய்யப்பட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்து சுவாமி தரிசனம் செய்தார். தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் சிவனடியார் கூட்டத்தினர் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து அன்னதானத்தில் பங்கேற்று உணவருந்தினர்.