பதிவு செய்த நாள்
04
டிச
2024
11:12
வில்லிவாக்கம்; ஹிந்து ஆன்மிக சேவா ஸ்மிதி டிரஸ்ட் சார்பில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு திருக்குடை யாத்திரை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஒருபகுதியாக, திருமுல்லைவாயிலில் இருந்து வந்த திருக்குடை யாத்திரை, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் வழியாக, ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் இரவு தங்கியது. பின், நேற்று காலை 8:30 மணிக்கு, அத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு புஜையுடன் திருக்குடை யாத்திரை துவங்கி, ஐ.சி.எப்., முத்து மாரியம்மன் கோவில் காந்தி நகர் வழியாக, அன்னை சத்யா நகர் குபேர லிங்கேஸ்வரர் கோவில், அண்ணா நகர் சிந்தாமணி விநாயகர் கோவில், மாங்காலிம்மமன் கோவில் வழியாக வந்தது. என்.எஸ்.கே., வழிவிடு விநாயகர் கோவில், எம்.எம்.டி.ஏ.,காலனி முத்துமாரியம்மன் கோவில் வழியாக, வடபழநி முருகன் கோவிலுக்கு சென்றது. இப்பகுதிகளில் இருந்த பக்தர்கள் திருக்குடையை வரவேற்பு வழிப்பட்டனர்.