திருச்சானூர் பிரமோற்சவம்; பக்தர்கள் வடம் பிடிக்க தேரில் வலம் வந்த பத்மாவதி தாயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2024 02:12
திருச்சானூர்; திருச்சானூர் பிரமோற்சவத்தின் எட்டாவது நாள் மகா ரதத்தில் தேரில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதியில் பத்மாவதி தாயார் வலம் வந்து அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயாரின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் 8வது நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட மகா ரதத்தில் ( தேரில் ) பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில், பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்திற்கு மத்தியில் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதில் பக்தர்கள் கோலாட்டம், பஜனை உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தியபடியும், சுவாமியின் பல்வேறு அவதாரங்கள் போல் வேடமணிந்தும் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட அஷ்வ வாகனம் (குதிரை வாகனத்தில்) பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பத்மாவதி தாயார் பிறந்த நட்சத்திரமான கார்த்திகை மாத பஞ்சமி 11.45 மணியளவில் மகர லக்னத்தில் பஞ்சமி தீர்த்தத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.