நடராஜர் மீது நிந்தாஸ்துதி பாடியவர் பாபவிநாச முதலியார். பக்தி என்னும் உரிமையில், கடவுளை சமயோஜிதமாக கிண்டல் செய்து பாடுவது நிந்தாஸ்துதி. ஆடியபடியே சுற்றித்திரிந்த சிவபெருமானே! இப்படி ஒருகாலைத் தூக்கி கொண்டு ஒரேயடியாக நிற்பது ஏன் என்று சொல்வாயா? என்னும் பொருளில், நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல் முடமானது ஏனென்று சொல்லுவீர் ஐயா! என்று நடராஜரிடம் கேள்வி கேட்கிறார். காம்போதி ராகத்தில் அமைந்த இந்தப் பாடல், அந்தக் காலத்தில் வெகு பிரசித்தம்.