பாம்பு செல்வது மாதிரியே ஓசை கொண்ட பாடல்களைப் புஜங்கம் என்பர். இந்த வகை ஸ்லோகங்களில் புஜங்க ப்ரயாதம் என்னும் சந்தம் அமைந்திருக்கும். பாம்பு வளைந்து நெளிந்து செல்வது போல இந்த சந்தமும் அமைந்திருக்கும். தெய்வங்களின் மீது புஜங்கப் பாடல்களைப் பாடியவர் ஆதிசங்கரர். இதில் புகழ்பெற்றது சுப்ரமண்ய புஜங்கம். திருச்செந்தூர் முருகனிடம் தன் நோய் நீங்கவேண்டி சங்கரர் பாடியது இது. நாக சொரூபமாக வழிபடும் தெய்வங்களில் சுப்பிரமணியருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.