பதிவு செய்த நாள்
07
டிச
2024
07:12
சூலூர்; பொன்னாண்டாம்பாளையம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கணியூர் ஊராட்சி பொன்னாண்டாம் பாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் பழமையானது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் தீட்டும் திருப்பணிகள் முடிந்தன. கடந்த, 3 ம்தேதி மாலை, சென்னியாண்டவர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்தக் குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.. மாலை விநாயகர் வழிபாடு, காப்பு கட்டுதல், முதல் கால ஹோமம் நடந்தது. இரவு விநாயகருக்கு அஷ்ட பந்தன் மருந்து சாத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு, 108 வகை மூலிகை திரவியங்களால் இரண்டாம் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. 8:30 மணிக்கு, விமானம் மற்றும் மூலவர் விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விநாயகப் பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.