திருவள்ளூர்; கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு வீரராகவர் தங்க கவச சேவை நடைபெறும். திருவள்ளூர் வீரராகவர் கோவில் 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஒன்றாக திகழ்கிறது. அஹோபில மடம் ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், திருக்கார்த்திகை முன்னிட்டு, வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை உற்சவர் வீரராகவர் பெருமாள் தங்க கவச சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.