கனமழை எச்சரிக்கை; சதுரகிரி வழிபாட்டிற்கு மலையேற பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2024 12:12
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி மலையில் மழை பெய்து வருவதால் கார்த்திகை மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் அறிவித்துள்ளார்.
அவரின் செய்தி குறிப்பு; தமிழ்நாடு வானிலை மையம் டிசம்பர் 12 முதல் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளதாலும், தாணிப்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை (டிச. 13) முதல் டிசம்பர் 16 வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.