திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஜீயர் பிரம்மரத வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2024 02:12
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு ஜீயர் சுவாமிகள் பிரம்மரதத்தில் வீதி உலா நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசீக ஏகாதசியை முன்னிட்டு பிரம்மரத விழா நேற்று துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் விஸ்வரூப தரிசனம், 4:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் பாண்டிய மண்டபத்தில் எழுந்தருளி விசேஷ பூஜைகள், ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் கைசிக புராணம் வாசித்தார். தொடர்ந்து 9:00 மணிக்கு பிரம்ம ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.