கடலுார்; கடலுார் மாநகரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவில்களில் சொக்கப்பனை ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது.
கார்த்திகை தீப விழாவையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடலுார் மாநரில் பொது மக்கள் தங்கள் வீட்டு வாசலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி சுவாமியை வழிபாடு செய்தனர். கார்த்திகை தீபத்தையொட்டி கடலுார் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர், வண்ணாரப்பாளையம் முத்துமாரியம்மன் உட்பட பல்வேறு கோவில்களின் முன்பு சொக்கப்பனை ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்யப்பட்டது. சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். சிறுவர்கள், இளைஞர்கள் மாவளி சுற்றி மகிழ்ந்தனர்.