உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2024 10:12
உளுந்தூர்பேட்டை; உளுந்தாண்டார்கோவில் ஸ்ரீ மாஷபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் தீபதிருநாளையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. உளுந்தூர்பேட்டை நகராட்சி உளுந்தாண்டார்கோவில் ஸ்ரீ லோகாம்பிகை சமேத மாஷபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் தீபதிருநாளையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக 10 அடி உயர கொப்பரை கோவில் மேல் தளப் பகுதியில் வைக்கப்பட்டு 200 கிலோ நெய் கொண்டு மகா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. சந்துரு குருக்கள் தீபம் ஏற்ற பக்தர்கள் அரோகரோ கோஷத்துடன் வழிபட்டனர். முன்னதாக சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாரதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.