Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணப்பாடி அய்யப்பன் கோயிலில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் தரிசனம் ; ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
 கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் தரிசனம் ; ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

15 டிச
2024
11:12

திருவொற்றியூர்; கவசமின்றி ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்ய, வரலாறு காணாத வகையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், திருவொற்றியூர் திக்குமுக்காடியது.

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், மூலவர் ஆதிபுரீஸ்வரர் ஆண்டு முழுதும், தங்க முலாம் பூசப்பட்ட நாக கவசம் அணிந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஆண்டிற்கு ஒருமுறை, கார்த்திகை பவுர்ணமியையொட்டி, மூன்று நாட்கள் மட்டும் கவசம் அகற்றப்பட்டு, புணுகு, சாம்பிராணி, தைலாபிஷேகம் வைபவம் நடக்கும். அதன்படி, நேற்று முன்தினம் மாலை, ஆதிபுரீஸ்வரர் புற்று வடிவிலான லிங்க திருமேனியில், அணிவிக்கப்பட்டிருந்த நாக கவசம் திறக்கப்பட்டு, மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, புணுகு, சாம்பிராணி, தைலாபிஷேகம் துவங்கியது. கவசமின்றி ஆதிபுரீஸ்வரரை காண, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இரண்டாவது நாளான இன்று விடுமுறை தினம் என்பதால், அதிகாலை, 2:00 மணி முதல், சன்னதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பூந்தோட்டப் பள்ளி வளாகம், எல்லையம்மன் கோவில் சந்திப்பு என, 3 கி.மீ., துாரத்திற்கு மூன்று வரிசைகளாக அணிவகுத்து காத்திருந்தனர். வரலாறு காணாத வகையில் கூடிய பல ஆயிரம் பக்தர்கள் குவிந்ததால், திருவொற்றியூர் நெடுஞ்சாலை உட்பட முக்கிய வீதிகள் திணறியது. இதனால், பொது தரிசன வரிசையில், 3 – 5 மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டியிருந்தது. கோவில் நிர்வாகம் செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இன்று ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., சங்கர் உள்ளிட்டோர் சுவாமி தரிசதனம் செய்தனர். நேற்றிரவு வரை, லட்சம் பேர் தரிசனம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கவசமின்றி ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்றிரவு, அர்த்தஜாம பூஜைக்கு பின், மீண்டும் கவசம் அணிவிக்கப்பட்டு விடும்.

மெட்ரோ ரயில்; ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்வை, 1999 ம் ஆண்டு முதல் பார்க்கிறேன். ஆனால், 25 ஆண்டுகளில் இதுபோல் ஒரு கூட்டத்தை நான் பார்த்தில்லை. அதிகாலை முதலே, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விடுமுறை தினம் ஒருபுறமிருப்பினும், மெட்ரோ ரயில் மற்றொரு முக்கிய காரணம். மேலும், இம்முறை இந்நிகழ்வு சரியாக விளம்பரமாகி உள்ளது. – எ.சசிதரன், 46, டீ கடை, சன்னதி தெரு, தேரடி, திருவொற்றியூர்.

சிறப்பான ஏற்பாடு; பொன்னேரில் இருந்து எனது மனைவியுடன் காலையே வந்து விட்டேன். நல்ல முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எங்களுக்கு விரைவாக தரிசனம் செய்ய முடிந்தது. பல முறை இந்த கவசம் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். இதுபோல கூட்டம் கூடியது கிடையாது. இனி வரும் காலங்களிலும், ஆன்மிகம் மீது மக்களுக்கு அதிகளவில் ஈடுபட வர வேண்டும்.ஆர். பாலசுப்பிரமணி, 80, பக்தர், பொன்னேரி.

காத்திருப்பு; ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்வை காண, இந்தளவிற்கு பக்தர்கள் கூட்டம் வரும் என, எதிர்பார்க்கவில்லை. காலை, 9:00 மணி முதல் காத்திருக்கிறோம். மதியம், 12:00 மணியாகி விட்டது. 4 –5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. குடிநீர் வழங்குகின்றனர். சன்னதி தெருவில் கூடுதல் ஏற்பாடுகள் செய்திருக்கலாம். எ. ராகவி, 27, பக்தர், அம்பத்துார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; தென்காசி வந்த அச்சன்கோவில் ஐயப்பன் திருஆபரணப் பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில் இன்று  நடந்த கடை ஞாயிறு  தீர்த்தவாரியில் தருமபுரம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காட்டில் நாததாரா இசை சங்கமம் சார்பில், மார்கழி திருவிழா  சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், தபோவனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் 51 வது ஆராதனை விழாவில் ... மேலும்
 
temple news
அவிநாசி; ஸ்ரீ மகா அவதார் பாபாஜியின் 1821ம் பிறவித் திருநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar