அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பண்ணாரி அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2024 10:12
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உருமாண்டாம்பாளைத்தில் கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பண்ணாரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உருமாண்டாம்பாளையத்தில் பழமையான பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பண்ணாரி அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலை ஒட்டி உள்ள மாப்பிள்ளை விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. வில்வமரத்துக்கு சுற்று பூஜை நடந்தது. இதில், கோவில் பூசாரி வாயில் துணியைக் கட்டி, குண்டத்தில் கற்பூரம் ஏற்றி, நிலாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். கண்ணாடி வைத்து மாலைகள் சூட்டி கண்ணாடி வழியாக நிலவை தரிசனம் செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. தீப விளக்கு பூஜைகளும் நடந்தன. பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சம்பழம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.