பதிவு செய்த நாள்
17
டிச
2024
11:12
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி, நேற்று, அதிகாலை 3:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் முருகப்பெருமானுக்கு, காலை, 5:00 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதே போல, மத்துார் மகிஷாசூரமர்த்தினி அம்மன், தணிகாசலம்மன், வனதுர்க்கை அம்மன், கோட்ட ஆறுமுகசாமி கோவில், விஜயராகவ பெருமாள் கோவில், சுந்தரவிநாயகர் ஆகிய கோவில்களில் மார்கழி மாதத்தையொட்டி, அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், திருத்தணியில் முருக பக்தர்கள் குழு மற்றும் சாய்பாபா பக்தர்கள் குழுவினர் வீதிகளில் பக்தி பரவசத்துடன் பஜனைகள் செய்தபடி பக்தி பாடல்களை பாடியவாறு சென்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோவிலில் நேற்று மார்கழி மாதம் முதல் நாளில் தனுர் மாத சிறப்பு வழிபாடு சோளிங்கர் பக்தோசித பெருமாள் கோவிலில் துவங்கின. வரும் ஜன.,14ம் தேதி வரை, தினசரி அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெறும்.