சஞ்சீவி மலையில் மார்கழி படி பூஜை; பூக்கள் துாவி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2024 10:12
ராஜபாளையம்; ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா நடந்தது. ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலை குமாரசாமி கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. முக்கிய நிகழ்வான படி பூஜை விழாவை ஒட்டி பஜனை பாராயண குழுவுடன் 365 படிகளும் ஒவ்வொன்றாக சூடம் பொருத்தி பூக்கள் துாவி வழிபட்டனர். பெண்கள் 10 படிகளுக்கு ஒரு தேங்காய், பழம் வைத்து வழிபாடு செய்து அவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். மலையில் உள்ள குமாரசாமி கோயிலில் சுவாமி அலங்காரத்தில் காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி அழகராஜா தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.