Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி என்றால் என்ன? எப்படி வழிபட ... மார்கழி ஸ்பெஷல் 2; திருமணத் தடையா... மீஞ்சூர் வரதராஜப் பெருமாள் மார்கழி ஸ்பெஷல் 2; திருமணத் தடையா... ...
முதல் பக்கம் » தகவல்கள்
மார்கழி ஸ்பெஷல்; கடன் பிரச்னை தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள்!
எழுத்தின் அளவு:
மார்கழி ஸ்பெஷல்; கடன் பிரச்னை தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள்!

பதிவு செய்த நாள்

17 டிச
2024
12:12

மாதங்களில் நான் மார்கழி என்றார் பகவான் கிருஷ்ணர். சிறப்பான இந்த மாதத்தில் திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாளை தரிசித்தால் கடன் பிரச்னை தீரும். வியாச மகரிஷியின் சீடரான பைலர் தாமிரபரணி நதிக்கரையில் தங்கியிருந்தார். இவர் தன் மனதிற்குள் தினமும் பெருமாளுக்கு கோடி மலர்களால் அர்ச்சனை செய்தார். ஒருமுறை பைலருக்கு நீலரத்தின மேனியனாக பெருமாள் இங்கு காட்சியளித்தார். இதனடிப்படையில் இக்கோயில் கட்டப்பட்டது.  


கருவறையில் கரியமாணிக்க பெருமாளை நின்ற கோலத்திலும், அனந்த பத்மநாப சுவாமியைக் கிடந்த கோலத்திலும், லட்சுமி நாராயணரை அமர்ந்த கோலத்திலும் இக்கோயிலில் தரிசிக்கலாம். தை மாதம் திருவோணத்தன்று நடக்கும் கருடசேவை சிறப்பானது. ரத சப்தமியன்று திருப்பதியை போல காலை முதல் இரவு வரை ஏழு வாகனங்களில் உலா நடக்கும். கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை கருட சேவை, வைகுண்ட ஏகாதசி, பங்குனி பிரம்மோற்ஸவம் முக்கியமானவை. திருநெல்வேலி டவுனில் கோயில் உள்ளது.


நேரம்: காலை 7:30 – 10:30 மணி, மாலை 5.30 முதல் 8.30 மணி 

தொடர்புக்கு:  99944 29488, 98421 - 64100


அருகிலுள்ள தலம்: நெல்லையப்பர் கோயில் 

நேரம்: அதிகாலை 5:30 – 12:30 மணி, மாலை 4:00 – 9:00 மணி

தொடர்புக்கு: 0462 – 233 9910.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar