நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடந்தது.சர்வ அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைப்போலவே அரண்மனை சந்தனக்கருப்பு சுவாமி கோவில், கோவில்பட்டி கைலாசநாதர், பகவதி அம்மன், காளியம்மன், ராக்காயி அம்மன், தில்லை காளியம்மன், திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும் மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலை சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இங்கும் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.