குன்னூர் வெங்கடாசலபதி கோவிலில் கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2024 10:12
குன்னூர்; குன்னூர் பெரிய வண்டிச்சோலை வெங்கடாசல கோவிலில், கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பெரிய வண்டிச்சோலையில், சின்ன திருப்பதி எனும், வெங்கடாசலபதி கோவிலில் கிருஷ்ணர் சிலை . பிரதிஷ்டை விழா நடந்தது. விழாவையொட்டி காலை முதல் கணபதி ஹோமம் உட்பட பல்வேறு ஹோமங்கள், பூஜைகள், மகா அபிஷேகம், அலங்கார பூஜை, மகாதீபாராதனை, சுற்று விளக்கு ஏற்றுதல், சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து மந்திரங்கள் ஒத கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மற்றும் பக்தர்கள் செய்தனர்.