மேட்டுப்பாளையம் அகத்தியர் ஞான பீடத்தில் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2024 11:12
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே உள்ள அகத்தியர் ஞான பீடத்தில் குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை கல்லாறு ரயில்வே கேட் அருகே அகத்தியர் ஞானபீடம் உள்ளது. இங்கு சித்தர் நெறிமுறைப்படி சர்வதேச நிவாரண மூலிகை மகா யாகமும், ஞான பீடத்தின், 22ம் ஆண்டை முன்னிட்டு, அகத்தியர் குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது. இன்று (19ம் தேதி) காலையில் ஏழு மணிக்கு கொடியேற்றம், அதைத்தொடர்ந்து, 18 சித்தர்களுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட உள்ளது. பின்பு குருபூஜை விழா தூங்குகிறது. இந்த நிகழ்ச்சிக்கு அகத்தியர் ஞானபீட பீடாதிபதி தவத்திரு சரோஜினி மாதாஜி அம்மையார் தலைமை வைக்கிறார். அதை தொடர்ந்து பஜனை நடைபெற உள்ளது. பின்பு சாதுக்கள் அருளாசியும், சரோஜினி மாதாஜியின் அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மதியம், 2:00 மணிக்கு சர்வதேச நிவாரண யாகம் நடைபெற உள்ளது. மாலை, 5:00 மணிக்கு பிரசாதனம், தீர்த்தம் ஆகியவை வழங்கப்பட உள்ளன. ராமசுப்பிரமணியம் நன்றி கூறுகிறார்.