கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் மார்கழி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2024 11:12
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் மார்கழி திருவெண்பாவை வழிபாடு நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த திருநீற்றம்மை உடனருள் செம்பொற்சோதிநாதர் கோயிலில் மார்கழி திருவெண்பாவை வழிபாடு பெண்களின் நற்பலன் வேண்டி நடத்தப்படுகிறது. அதிகாலையில் கோ- பூஜைக்குப்பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி, திருமுறை விண்ணப்பம்,திருவெண்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடப்படுகிறது. பெண்கள் தனுர் மாதம் எனும் மார்கழி மாதத்தில் பொய்கையில் குளித்து கடவுளை வழிபடுவது நற்பலன்களை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. அதன்படி செம்பொற்சோதிநாதர் கோவிலில் நடத்தப்படும் வழிபாட்டில் ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருநாவுக்கரசு, திருமடம் நாச்சியப்பன் செய்து வருகிறார்.