ஈச்சனாரி விநாயகர் கோவிலில் நாள் முழுதும் பிரசாதம் திட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2024 03:12
கோவை; கோவை, ஈச்சனாரி விநாயகர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில், கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, நேற்று ஈச்சனாரியிலுள்ள விநாயகர் கோவிலில் இத்திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு, இனிப்பு மற்றும் கார கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை பக்தர்களுக்கு வழங்கி, துவக்கி வைத்தார். ஹிந்து சமய அறநிலைய துறை கமிஷனர், கூடுதல் கமிஷனர் (நிர்வாகம்) சுகுமார், கோவில் பரம்பரை அறங்காவலர் அழகு மகேஸ்வரி, கோவை இணை கமிஷனர் ரமேஷ், துணை கமிஷனர் (சரிபார்ப்பு) விஜயலட்சுமி, கோவை உதவி கமிஷனர் இந்திரா மற்றும் கோவில் உதவி கமிஷனர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.