பதிவு செய்த நாள்
26
டிச
2024
10:12
காஞ்சிபுரம்; காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், திருப்பதி முகாமில் இருந்து, கடந்த 18ம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வந்தார். சங்கர மடத்தில் சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். இந்நிலையில், 23ம் தேதி இரவு, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு விஜயேந்திரர் சென்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, கோவில் நிர்வாகம் சார்பில், விஜயேந்திரருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் உள்ள 2025ம் ஆண்டுக்கான காலண்டர்களை கோவில் ஸ்தானிகர்களுக்கும், கோவில் அலுவலக ஊழியர்களுக்கும் வழங்கினார். இதில், காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச ஐயர், மணியகாரர் சூரியநாராயணன், சங்கர மடம் ஸ்ரீகார்யம் செல்லா விஸ்வநாதசாஸ்திரி, கோவில் ஸ்தானீகர்கள் உள்ளிட்டோர்உடனிருந்தனர்.