ரூ.3.50 கோடியில் ராமேஸ்வரம் கோயில் துாண்கள் புதுப்பிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2024 10:12
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் துாண்கள், பிரகாரங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் நடக்கிறது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் 17ம் நுாற்றாண்டில் பிரகாரங்கள், ராஜ கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இக்கோயிலின் 3ம் பிரகாரம் தான் ஆசியாவில் மிக நீளமானது. இங்கு 2, 3ம் பிரகாரம் துாண்கள், 3ம் பிரகாரத்தில் அதிஷ்டானம் பகுதியில்சிற்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனை பழமை மாறாமல் புதுப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற கமிட்டியின் வழிகாட்டுதலின் படி ரூ.3.50 கோடியில் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களின் கலவையில் புதுப்பிக்கும் பணி சில மாதங்களாக நடக்கிறது. இதில் 3ம் பிரகாரத்தில் 80 சதவீத பணிகள் முடிந்துஉள்ளன. இன்னும் இரு மாதங்களில் அனைத்து பணிகளும் முடிவடையும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.