அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை முதல் ஆண்டு விழா; ஜனவரி 11ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2024 12:12
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்ட ராமர் கோவிலை திறந்து வைத்தார். தொடர்ந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் காத்திருந்து சுவாமி ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் ஸ்ரீ ராம் லல்லா விக்ரஹாவின் பிராண பிரதிஷ்டையின் முதல் ஆண்டு விழா வரும் ஜனவரி 11, 2025 அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதிஷ்டா துவாதசி அன்று பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு அன்று காலை 8 மணி முதல் 11 மணி மற்றும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை யக்ஞ மண்டபத்தில் யஜுர்வேத மந்திரங்களுடன் கூடிய அக்னிஹோத்ரம் நடைபெறுகிறது. மேலும் 6 லட்சம் ராம் மந்திர பாராயணம், ராம் ரக்ஷா ஸ்தோத்ரா, ஹனுமான் சாலிசா பாராயணம் நடைபெறுகிறது. கோவிலின் தரை தளத்தில் ராக சேவா, ராம்சரித்மனாஸின் இசை பாராயணம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ராம்சரித்மனாஸ் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறு உள்ளது. பல்வேறு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து காலை முதல் பக்தர்களுக்கு ஸ்ரீராமரின் பிரசாதம் விநியோகம் செய்யப்படவுள்ளது.