திருத்துறைப்பூண்டி: உலக மக்கள் நன்மைக்காக ராமர் கோவிலில் நடந்த தாமோதர திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, நெய் தீபமேற்றி பிரார்த்தனை செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியிலுள்ள ராமர் கோவிலில் தாமோதர திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், உலக மக்கள் அனைவருக்கும் நன்மை ஏற்பட வேண்டி, தாமோதரன் ஸ்வாமிக்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி ஆரத்தி எடுத்தனர். இதை கும்பகோணம் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நிர்வாகி வனமாலி கோபால்தாஸ் பிரபு மற்றும் விஜய் வெங்கடேஷ் ஆகியோர் முன்னின்று நடத்தினர். இவ்விழாவில் சுற்றுவட்டார பக்தர்கள், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, வழிபாடு நடத்தினர். ஏற்பாட்டை இஸ்கான் நாம மையத்தின் சார்பில் துளசிதாஸ் செய்திருந்தார்.