பதிவு செய்த நாள்
29
நவ
2012
11:11
திருத்தணி: திருத்தணி அருகே வெங்கடேச பெருமாள் கோவிலில், கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப் பட்டன.திருத்தணி அடுத்த, கொல்லகுப்பம் கிராமத்தில், வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கார்த்திகை பவுர்ணமி முன்னிட்டு, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப் பட்டது.காலை 9:00 மணிக்கு கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 18 கலசங்கள் அமைத்து, கணபதி ஹோமம் மற்றும வாஸ்து பூஜைகள் நடந்தன. பின்னர், மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு உற்வசருக்கு திருக்கல்யாணமும், மாலை 6:00 மணிக்கு சுமங்கலி பூஜைகளும் நடத்தப்பட்டது.இரவு 8:00 மணிக்கு உற்வசர் வெங்கடேச பெருமாள் கிராம வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அன்னதானமும், அரிகதா கச்சேரி நிகழ்ச்சியும் நடந்தது. அதேபோல், திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில் அமைந்து உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலிலும், கார்த்திகை கிருத்திகை மற்றும் பவுர்ணமி முன்னிட்டு, மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.