பதிவு செய்த நாள்
27
டிச
2024
03:12
தொண்டாமுத்தூர்; பேரூரில், ஸ்ரீ மஹா பெரியவா மணி மண்டபத்தில், காஞ்சி மஹா பெரியவா ஆராதனை விழா நடந்தது.
சாம வேத பாராயண டிரஸ்ட் சார்பில், காஞ்சி மஹா பெரியவா 30ம் ஆண்டு ஆராதனை விழா, பேரூர் ஸ்ரீ மஹா பெரியவா மணிமண்டபத்தில் இன்று நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை சங்கல்பம், கோ பூஜை கணபதி ஹோமம் நடந்தது. காலை 8:00 மணிக்கு, ருத்ரஹோமம், வஸோத்தாரையும், அதனைத் தொடர்ந்து மஹா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பகல், 12:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின், சதுர்வேத பாராயணம், தீபாராதனை, ஸ்ரீ ஏக்நாத் பஜன் மண்டலி குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, மங்கள ஆராத்தி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.