அவிநாசி; அவிநாசி மடத்துப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. அவிநாசி அடுத்த மடத்துப் பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 18ம் தேதி அம்மன் சாட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனை, காப்பு கட்டுதல், அம்மன் அழைத்தல்,மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவை நடைபெற்றது. பொங்கல் விழாவின் நிறைவு நாளான இன்று மஞ்சள் நீராட்டுடன், விழா நிறைவு பெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.