டிச.30ல் அனுமன் ஜெயந்தி விழா; அனுமன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2024 03:12
பரமக்குடி; பரமக்குடி, எமனேஸ்வரம் அனுமன் கோயில்களில் டிச. 30 அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. பரமக்குடி கிழக்கு பகுதி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் 32 வது ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நடக்க உள்ளது. டிச.29 காலை 8:00 மணி தொடங்கி ஹோமம், 108 கலச அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து டிச.30 அன்று காலை 5:00 மணி முதல் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ராமஜெயபாரணை நடக்க உள்ளது. பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு வழிபாடு நடந்தது. தினமும் ராமர் வீதியுலா வந்து அருள் பாலிக்கிறார். அனுமன் ஜெயந்தி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இதேபோல் எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது.