கிணத்துக்கடவு ஐயப்ப சுவாமி கோவில்களில் மண்டல பூஜை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2024 10:12
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஐயப்ப சுவாமி கோவில்களில் நேற்று (26ம் தேதி) மண்டல பூஜை வழிபாடு சிறப்பாக நடந்தது. கிணத்துக்கடவு, செங்குட்டை பாளையம்பாளையம் ஐயப்ப சுவாமி கோவிலில், மண்டல பூஜை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதில், சுவாமிக்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. பின், சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பலர் சரண கோஷங்களை முழங்கி சுவாமியை தரிசனம் செய்தனர். இறுதியில், ஐயப்ப பஜனை பாடல்கள் பாடி விழா நிறைவுற்றது. *பெரியாக்கவுண்டனூர், ஐயப்ப சுவாமி கோவிலில் நடந்த மண்டல பூஜை நிகழ்ச்சியில், ஐயப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள், சுவாமிக்கு பஜனை பாடல்கள் பாடி படி பூஜை செய்தனர். இதில் பெரியக்கவுண்டனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.