மத்திய பிரதேசம் மோரேனாவிலிருந்து 25வது கிலோ மீட்டரிலும், குவாலியரிலிருந்து 30வது கிலோ மீட்டரிலும் பாடவலி என்ற கிராமத்துக்கு அருகில் பாடேஸ்வர் உள்ளது. இந்தப் பகுதியில் இருநூறுக்கும் அதிகமான இந்து கோயில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சிவன் கோயில்கள். சில விஷ்ணு கோயில்கள். இந்தக் கோயில்கள் காரைக்கல்லால் ஆனவை, கஜுராகோ காலத்திற்கும் முந்தையவை. காலத்தினாலும், பூமி அதிர்ச்சிகளினாலும் இந்தக் கோயில்களில் சில, பூமிக்குள் புதைந்து கிடக்கின்றன. 2005ம் ஆண்டு முதல், இந்தியப் புதை பொருள் ஆய்வு நிறுவனம், இவற்றை வெளிக் கொணர்வதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. பூமியில் மறைந்திருந்த 4 கோயில்கள் இந்தப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. அகழாய்வுப் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.