ஆக்ராவிலிருந்து 70வது கிலோ மீட்டரில் யமுனா நதிக்கரையில் இந்த பாடேஸ்வர் உள்ளது. இந்த பாடேஸ்வரரை ஒட்டி சவுரியூர் உள்ளது. இங்கு 101 சிவன் கோயில்கள் உள்ளன. ராஜா பதாசிங் பந்தரியா என்பவர், யமுனா நதியில், தடுப்பு அணை கட்டுவதற்காக, நதியைத் திருப்பி விட வாகாய் இந்த சிவன் கோயில்களைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இங்கு வருடாவருடம் அக்டோபர், நவம்பரில் கால்நடை கண்காட்சி வெகு சிறப்பாக நடக்கிறது. இதில் பால் கொடுக்கும் மிருகங்களும் ஏராளமாய் விற்பனைக்கு வருகின்றன. இந்த சமயம் இந்துக்கள் பல்லாயிரக்கணக்கில் இங்கு கூடி, யமுனையில் ஸ்நானம் செய்து, 101 சிவன் கோயில்களையும் தரிசித்து ஆசி பெற்று கால் நடைகளை விற்று, வாங்கிச் செல்கிறார்கள்! இரண்டு மாதமும் ஒரே கொண்டாட்டம் தான்!