திருப்புத்துாரில் ஆஞ்சநேயர் ஜெயந்திக்கு ரூபாய் நோட்டுக்களில் அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2024 07:12
திருப்புத்தூர்; ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு திருப்புத்துாரில் உள்ள மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயில் சன்னதி ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர், விநாயகர் சன்னதியில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான ரூ.100, 200, 500 நோட்டுக்களால் அலங்காரம் செய்துள்ளனர். இன்று முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக அலங்காரம் இருக்கும். இன்று காலை 7:00 மணிக்கு மூலவர் அபிேஷகம், சிறப்பு அலங்காரமும், மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரமும் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் திருவீதி உலா நடைபெறும்.