அனுமன் ஜெயந்தி; பீளமேடு அஷ்டாம்ச ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2024 10:12
கோவை; பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ஆஞ்சநேயர் எட்டுவிதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார். இங்கு இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அஷ்டாம்ச ஆஞ்சநேயர் சன்னிதியில் மூலவர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. இதில் பூக்கள் மழையில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.