Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் ... ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் திருவாடுதுறை ஆதீனம் சாமி தரிசனம் ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதூர் ராம வரதாகினி மடத்தில் அனுமன் ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதூர் ராம வரதாகினி மடத்தில் அனுமன் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

30 டிச
2024
04:12

மயிலாடுதுறை; மருதூர் ராம வரதாகினி மடத்தில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீன தம்பிரான் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மருதூர் லட்சுமி நாராயணபுரம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான ராம வரதாகினி மடம் உள்ளது. இங்கு ராமர் சன்னதியில் ஆஞ்சநேய சுவாமி அருள் பாலிக்கிறார். ஆண்டு தோறும் இந்த திருமடத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம். மார்கழி மாத மூல நட்சத்திரம் கூடிய அமாவாசை தினமான இன்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராம வரதாகினி மடத்தில் காவேரியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கடத்தில் வைக்கப்பட்டு ஆஞ்சநேயர் மூல மந்திர ஜபம் மற்றும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை அடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடந்த சிறப்பு யாகம் மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை நடந்தது. முடிவில் நாதஸ்வர வித்வான் விமல்ராஜ், தவில் வித்வான் வெங்கடேசன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருதூர் சாம்பசிவம் மற்றும் ராஜாபிள்ளை ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar