பதிவு செய்த நாள்
30
டிச
2024
06:12
வலங்கைமான்; திருவோணமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, ஆலங்குடி அருகே உள்ள திருவோணமங்கலம் கிராமத்தில் ஞானபுரி சித்ரகூட சேத்திரம், ஸ்ரீ சங்கடகர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி, இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ஸ்ரீ ஜகத்குரு பதரீ சங்கரசார்ய ஸ்ரீ க்ஷேத்ர சகட புர ஸ்ரீ வித்ய பீட ஸ்ரீ ஸ்ரீ ஆச்சார்ய மகா ஸ்வாமிகள் சிறப்பு அபிஷேகம் செய்தார். அதைத் தொடர்ந்து 100 லிட்டர் பால், 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கார்யம் நிர்வாகி சந்திரமவுலிஸ்வரன், தர்மாதிகாரி ரமணி அண்ணா ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.