இருமுடி கட்டு ஏந்தி ஸ்கேட்டிங்; ரோலரில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்த பக்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2024 04:12
பாலக்காடு; இருமுடி கட்டு ஏந்தி ஸ்கேட்டிங் ரோலரில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து மாறுபட்ட புனித யாத்திரை செய்து மனுராஜ் சாதித்துக் காட்டியுள்ளனர்.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் அகத்தேத்தறை பகுதியைச் சேர்ந்த மணி-ருக்மணி தம்பதியரின் மகன் மனுராஜ் 16, மலம்புழா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவன் ஆன இவர் ரோலர் ஸ்கேட்டிங் நன்கு அறிந்தவர். ரோலர் ஸ்கேட்டிங்கில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றவர். இவர் குறைந்தபட்ச உயரத்திற்கு கீழே ஸ்கேட்டிங் செய்து பிரபலமானவர். முன்பு 60 கிலோமீட்டர் தூரம் ஸ்ஸ்கேட்டிங் பயணம் நடத்திய உள்ளன. இந்த நிலையில் தன் முதல் சபரிமலை யாத்திரை ஸ்கேட்டிங் ரோலரில் செய்து சாதித்துக் காட்டியுள்ளன மனுராஜ்.
இது குறித்து மனுராஜ் கூறுகையில்: 260 கிலோமீட்டர் கொண்ட இந்த புனித யாத்திரை கடந்த டிச. 19ம் தேதி தொடங்கி 21ம் தேதி சபரிமலை ஐயப்பன் சன்னதி அடைந்தேன். பயணத்தில் எனக்கு மிகவும் சவால் அளித்தது மேடு பள்ளங்கள் ஆகும். அவையெல்லாம் தாண்டி ஐயப்பனை தரிசிக்க முடிந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை மணி ஸ்கூட்டரில் என்னுடன் பயணித்தார். தவிர ஜீப்பில் மலம்புழா சுகாதார மைய செவிலியரான தாய் ருக்மிணியும் என்னுடன் பம்பை வரை வந்திருந்தனர். பயணத்தின் போது உடல்நிலை பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை. விபத்தை தவிர்க்க வேகத்தை குறைத்து பயணம் செய்துள்ளேன். தினமும் 100 கிலோமீட்டர் பயணித்தேன். ஆறு வயது முதல் ரோலர் ஸ்கேட்டிங் கற்றுக்கொண்டு வருகிறேன். மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அமைப்பின் உதவியுடன் சஜி என்பவர் எனக்கு இதில் பயிற்சி அளித்து வருகின்றனர். திரும்பி ஊருக்கு வந்தது வாகனத்தில் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.