நீங்கள் அற்புதமான மனிதராக இருப்பதே சிறந்த பரிசு; மக்களுக்கு சத்குரு புத்தாண்டு வாழ்த்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2025 10:01
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டத்தில், நீங்கள் மிகவும் அற்புதமான மனிதராக இருப்பதன் மூலம் இந்த உலகிற்கு சிறந்த பரிசினை அளிக்க முடியும் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகியில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று நடந்தது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு முன்னிலையில் நடந்த இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவின் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசுகையில்,"புத்தாண்டில் நாம் மிராக்கில் ஆப் தி மைண்ட் என்ற செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதன் மூலம் அடுத்த 24 மாதங்களில் 3 பில்லியன் மக்கள் குறைந்தபட்சம், 7 நிமிடங்களாவது தியானத்தில் ஈடுபட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டில் நீங்கள் இந்த உலகத்தை ஒளிர செய்ய வேண்டும். நீங்கள் மிகவும் அற்புதமான மனிதராக இருப்பதன் மூலம் இந்த உலகிற்கு சிறந்த பரிசினை அளிக்க முடியும்,"என்றார்.