இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆங்கில புத்தாண்டு நாளான இன்று, திருவருள் எங்கும் பரவட்டும், இருள்கள் யாவும் நீங்கட்டும். சாதி, பேதங்கள் நீங்கட்டும், சமத்துவம் எங்கும் பரவட்டும். இளையோர் தீஞ்செயல் நீங்கட்டும், முதியோர் அற வழி செல்லட்டும். தொழில்கள் யாவும் பெருகட்டும், மக்கள் தொய்வில்லாது உழைக்கட்டும். மதுக்கடை என்றும் ஒழியட்டும், மங்களம் மக்கள் அடையட்டும். மனம் பல வழிகளை தேடும். அதற்கு நல்லது கெட்டது என்பது தெரியாது. நமது அறிவின் செயலால், நாம்தான் தீயவைகளை புறந்தள்ளிவிட்டு நல்லவற்றை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.