பதிவு செய்த நாள்
01
ஜன
2025
07:01
திருப்பூர்; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருப்பூர் பகுதிகளில் உள்ள கோவில்களில், பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் பகுதியில் உள்ள கோவில்களில், ஆங்கில புத்தாண்டையொட்டி, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலை முதல், மதியம் வரை, குடும்பசகிதமாக வந்து, பக்தர்கள் வழிபட்டனர். கோவில்களில், நேர்த்திக்கடன் அடிப்படையில், பக்தர்கள் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், வீரராகவப்பெருமாள் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் உட்பட, அனைத்து கோவில்களிலும், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.