Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆங்கில புத்தாண்டு தினத்தில் ... ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவோணமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவோணமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு தரிசனம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2025
07:01

 வலங்கைமான்; புத்தாண்டை முன்னிட்டு, திருவோணமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, ஆலங்குடி அருகே உள்ள திருவோணமங்கலம் கிராமம், ஞானபுரி சித்ரகூட சேத்திரத்தில் சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி, இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்கள் தீர்க்கும் சஞ்சீவி மூலிகையுடன் அருள்பாலித்து வருகிறார். இக் கோவிலில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, ஸ்ரீ ஜகத்குரு பதரீ சங்கராசார்ய ஸ்ரீ க்ஷேத்ர சகடபுர ஸ்ரீவித்யபீட ஸ்ரீஸ்ரீ ஆச்சார்ய மகா சுவாமிகள் சிறப்பு அபிஷேகம் செய்தார். பால், பன்னீர் உள்பட 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். தொடர்ந்து, வெள்ளி ரத ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். பக்தர்களுக்கு, பூஜை செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீகார்யம் நிர்வாகி சந்திரமவுலீஸ்வரன், தர்மாதிகாரி ரமணி அண்ணா ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மனிதனை நல்ல பண்புள்ளவனாக உருவாக்க, இளைஞர்களிடம் தர்மசிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar