பிள்ளைச்சாவடி சாய்பாபா கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2025 10:01
புதுச்சேரி; பிள்ளைச்சாவடி கமல சாய்பாபா ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி, பிள்ளைச்சாவடி, தொழில்நுட்ப பல்கலைக்கழம் எதிரே கமல சாய்பாபா ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு கொடியேற்றம்,6:30 மணிக்கு தரிசனம் துவங்கியது. 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம்,9:00 மணிக்கு சாயி சங்கீத் இசை குழுவினரின் சாயி பஜனை நிகழ்ச்சி நடந்தது. காலை 11:30 மணிக்கு பாபா பல்லக்கு உற்சவம், 12:00 மணிக்கு ஆரத்தி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:30 மணிக்கு தருமாபுரி, ராஜன், கோபாலகிருஷ்ணன் குழுவினரின் சாயி பஜனை நிகழ்ச்சி, இரவு 8:00 ஆரத்தி நடந்தது.