சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து விழா; ஆழ்வார்களுக்கு தீபாராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2025 05:01
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் பகல் பத்து உற்ஸவத்தில் ஆழ்வார்களுக்கு தினமும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு வருகிறது. பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து விழா டிச.31ல் துவங்கியது. தினமும் பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அப்போது நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்பட்டு, பன்னிரு ஆழ்வார்கள் சன்னதியில் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டு வருகிறது. ஜன. 9 மாலை மோகினி அவதாரமும், மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.