காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வரும் 10ல் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2025 02:01
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 44வது திவ்யதேசமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். இதில், பல ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வர். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு, வரும் 10ம் தேதி நடக்கிறது. இதில், அதிகாலை 2:00 மணிக்கு சுப்ரபாத சேவையும், தொடர்ந்து விஸ்வரூப சேவையும், காலை 11:00 மணிக்கு நிஜபாதம் சேவையும், நாள் முழுதும் சிறப்பு தரிசனமும் நடக்கிறது. சிறப்பு சேவை தரிசனத்திற்கு ஆன்லைன் மற்றும் கோவில் வளாகம் நுழைவு சீட்டு முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களுக்கு தேவையான சேவையை கோவில் வங்கி கணக்கில், அதற்கான கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இலவச தரிசன சேவை உற்சவம் நாள் முழுதும் உண்டு என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.