பதிவு செய்த நாள்
30
நவ
2012
11:11
திருக்கோவிலூர்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 94ம் ஆண்டு ஜெயந்தி விழா இன்றும், நாளையும் நடக்கிறது. திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் 94ம் ஆண்டு ஜெயந்தி விழா இன்று நடக்கிறது. காலை, 6:30 மணிக்கு பிரதான் மந்திர் ஹோமம், 10:30 மணிக்கு பக்தர்கள் பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொள்கின்றனர். நாளை காலை, 7:00 மணிக்கு, பிரதான் மந்திரில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜைகள் நடக்கின்றன. இரவு வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா, ஆரத்தி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஜஸ்டிஸ் அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.