வைகுண்ட ஏகாதசி : லட்டு தயாரிப்பில் மகா விஷ்ணு சேவா அமைப்பினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2025 10:01
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்கம் சார்பில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி, இந்த ஆண்டும் பிரசாதமாக லட்டு வழங்க சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். அதற்காக நேற்று பெருமாநல்லூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் வளாகத்தில் சங்கத்தினர் லட்டு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் தலைவர் தனபால், கூறியதாவது : இந்த ஆண்டு 13 வது ஆண்டாக லட்டு பிரதாசம் வழங்க உள்ளோம். அதற்காக 27 ஆயிரம் லட்டு தயாரிக்க உள்ளோம். இதற்காக எங்கள் சங்க உறுப்பினர்கள் 200 பேர் ஈடுபட்டுள்ளனர். தயார் செய்யப்படும் லட்டில் பெருமாநல்லூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு 15 ஆயிரம், தாழக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு 2 ஆயிரம், திருமுருகன் பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு 6 ஆயிரம், கோபி பிரசண்ண வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு ஆயிரம், கணக்கம்பாளையம் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு ஆயிரம், என பிரித்து வழங்கி பக்தர்களுக்கு வழங்க உள்ளோம். என்றார்.